/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இலக்கிய சொற்பொழிவு பங்கேற்க அழைப்பு
/
இலக்கிய சொற்பொழிவு பங்கேற்க அழைப்பு
ADDED : ஜூலை 11, 2024 11:22 PM
கோவில்பாளையம் : தமிழ்ச் சங்கம் சார்பில், இலக்கிய சொற்பொழிவு இன்று (12ம் தேதி) நடக்கிறது.
கோவில்பாளையம், கவையன்புத்தூர் தமிழ்ச் சங்கமும், பி.பி.ஜி., கலை அறிவியல் கல்லூரியின் தமிழ் துறையும், இணைந்து நடத்தும், இலக்கிய விழா குரும்பபாளையம், பி.பி.ஜி., கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் இன்று (12ம் தேதி) காலை 10:00 மணிக்கு நடக்கிறது.
கூட்டத்தில் 'செருவந்த போழ்தில் சிறைசெய்யா' என்னும் தலைப்பில் குழந்தைசாமி பேசுகிறார். பாவலர், பரிதிமாற் கலைஞர், இரட்டைமலை சீனிவாசன், குன்றக்குடி அடிகளார், மறைமலை அடிகளார், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதி ஆகியோர் குறித்து, தமிழ் ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் பேசுகின்றனர்.
கவியரங்கம் நடக்கிறது. சான்றோர்கள் கவுரவிக்கப்படுகின்றனர். விழாவில், பங்கேற்று தமிழ் அமுதம் பருக தமிழ்ச் சங்க நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.