/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யுவா கபடி தொடர் இறுதிப்போட்டியில் கற்பகம்
/
யுவா கபடி தொடர் இறுதிப்போட்டியில் கற்பகம்
ADDED : ஜூன் 05, 2024 08:33 PM
கோவை : மாநில அளவிலான யுவா கபடி தொடர் அரையிறுதிப்போட்டியில், பிரிஸ்ட் பல்கலை அணியை வீழ்த்தி, கற்பகம் பல்கலை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
தமிழகத்தில் உள்ள சிறந்த அணிகளுக்கு, மாநில அளவில் யுவா கபடி தொடர் என்ற பெயரில் கபடி போட்டி நடத்தப்படுகிறது.
இந்தாண்டுக்கான போட்டிகள், மே 6ம் தேதி முதல் சென்னை வேலம்மாள் போதி கேம்பசில் நடக்கிறது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறந்த 16 அணிகள் தேர்வு செய்யப்பட்டன. லீக் மற்றும் நாக் அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில், ஈச்சனாரி கற்பகம் பல்கலை அணி பங்கேற்று, லீக் சுற்று முதல் சிறப்பாக விளையாடி வருகிறது.
நேற்று நடந்த அரையிறுதிப்போட்டியில், தஞ்சாவூர் பிரிஸ்ட் பல்கலை அணியை எதிர்த்து விளையாடிய கற்பகம் பல்கலை அணி, 36 - 33 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
மற்றொரு அரையிறுதிப்போட்டியில், வேல்ஸ் பல்கலை அணி 42 - 24 என்ற புள்ளிக்கணக்கில் என்.ஏ.அகாடமி அணியை வீழ்த்தியது.
இன்று நடக்கும் இறுதிப்போட்டியில், வேல்ஸ் பல்கலை அணியை எதிர்த்து கற்பகம் பல்கலை அணி விளையாடுகிறது.