/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வால்பாறை பள்ளிகளுக்கு இன்று 'லீவு'
/
வால்பாறை பள்ளிகளுக்கு இன்று 'லீவு'
ADDED : ஜூலை 16, 2024 02:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை;வால்பாறையில், கடந்த இரு நாட்களாக இடைவிடாமல் தொடர் கனமழை பெய்து வருகிறது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்கள் விழுந்தும், மண் சரிந்தும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இன்றும் மழை தொடரும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, தொடர் கனமழை காரணமாக, வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட, கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டுள்ளார்.