/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள்சிறை!
/
போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள்சிறை!
ADDED : ஜூலை 15, 2024 11:52 PM
கோவை;போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள்சிறை விதித்து, கோவை கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.
கோவை, சுந்தராபுரம் அருகேயுள்ள பிள்ளையார்புரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்,64; கூலி தொழிலாளி. தெருவில் விளையாடிய ஒன்பது வயது சிறுமிக்கு, சாக்லெட் தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமி, பள்ளி ஆசிரியரிடம் தெரிவித்தார். இது தொடர்பாக குழந்தைகள் நல அமைப்பினர் போலீசில் புகார் அளித்தனர். போத்தனுார் போலீசார் விசாரித்து, 2019, ஏப்., 4ல் செல்வராஜை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
அவர் மீது, கோவையிள்ள முதன்மை போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி குலசேகரன், குற்றம் சாட்டப்பட்ட செல்வராஜூக்கு ஆயுள்சிறை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் ரஷீதா பேகம் ஆஜரானார்.