/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வளர்ச்சி பணிகளில் முறைகேடு: நகராட்சி அதிகாரிகள் ஆய்வு
/
வளர்ச்சி பணிகளில் முறைகேடு: நகராட்சி அதிகாரிகள் ஆய்வு
வளர்ச்சி பணிகளில் முறைகேடு: நகராட்சி அதிகாரிகள் ஆய்வு
வளர்ச்சி பணிகளில் முறைகேடு: நகராட்சி அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஜூலை 29, 2024 03:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை;வால்பாறை நகராட்சி கூட்டம் கடந்த, 25ம் தேதி நடந்தது. கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள், நகராட்சியில் எந்த வளர்ச்சிப்பணியும் முறையாக நடப்பதில்லை.
தரமற்ற வளர்ச்சிப் பணிகள் நடைபெறுவதை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை என, அடுக்கடுக்காக புகார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, வால்பாறை நகராட்சி கமிஷனர் விநாயகம் தலைமையில், நகராட்சி அதிகாரிகள், நகரில் பல்வேறு இடங்களில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தனர்.