/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கே.பி.ஆர்., கல்லுாரியில் தேசிய வூஷு போட்டி
/
கே.பி.ஆர்., கல்லுாரியில் தேசிய வூஷு போட்டி
ADDED : ஜூலை 29, 2024 03:23 AM

கோவை:தேசிய அளவிலான ஜூனியர் யூத் வூஷு சாம்பியன்ஷிப் போட்டிகள், கே.பி.ஆர்., கல்லுாரியில், வரும் 31ம் தேதி வரை நடக்கிறது.
தமிழ்நாடு வூஷூ சங்கம் சார்பில், 23வது தேசிய ஜூனியர் யூத் வூஷு சாம்பியன்ஷிப் போட்டிகள் கே.பி.ஆர்., இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது.
இப்போட்டியில், 31 மாநிலங்களிலிருந்து 700 வீரர், 600 வீராங்கனைகள் என, 1300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
போட்டியை, கே.பி.ஆர்., குழும தலைவர் ராமசாமி துவக்கி வைத்தார். கோவை மாநகர் துணை கமிஷனர் சரவணன், கல்லூரி முதல்வர் சரவணன், இந்திய வூஷு அமைப்பின் தேசிய தலைவர் ஜிதேந்திர சிங் பாஜ்வா, பொதுச்செயலாளர் விஜய் ஷராப், தமிழ்நாடு வூஷூ சங்க தலைவர் அலெக்ஸ் அப்பாவு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.