ADDED : ஜூலை 29, 2024 03:09 AM

வால்பாறை;வால்பாறையில் உள்ள ரேஷன் கடைகளில், கூட்டுறவு துறை மண்டல இணைப்பதிவாளர் நேரில் ஆய்வு செய்தார்.
வால்பாறையில் சிந்தாமணி கூட்டுறவு சிறப்பங்காடிக்கு சொந்தமான, 17 கடைகள் உள்ளன. இந்நிலையில் கோவை மாவட்ட கூட்டுறவு துறை மண்டல இணைப்பதிவாளர் அழகிரி, வால்பாறை, சோலையாறு அணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்படும் ரேஷன் கடைகளை நேரில் ஆய்வு செய்த பின் கூறியதாவது:
பொதுமக்களுக்கு எந்தவித புகாருக்கும் இடமளிக்காமல், ரேஷன் பொருட்களை உரிய நேரத்தில் வழங்க வேண்டும். வால்பாறையில் தற்போது மழை காலம் என்பதால் ரேஷன் அரிசி மூட்டைக்கு அடியில் தார்பாயினை போட வேண்டும்.
பொதுவிநியோகத்திட்டத்தின் கீழ், மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்கள், எடை அளவு குறைவில்லாமல் வழங்க வேண்டும். அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தாமல், உரிய நேரத்தில் கடைகளை திறந்து, பொருட்களை வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.