/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை தொகுதி வெற்றிக்கு தி.மு.க.,வினர் கிடா விருந்து
/
கோவை தொகுதி வெற்றிக்கு தி.மு.க.,வினர் கிடா விருந்து
கோவை தொகுதி வெற்றிக்கு தி.மு.க.,வினர் கிடா விருந்து
கோவை தொகுதி வெற்றிக்கு தி.மு.க.,வினர் கிடா விருந்து
ADDED : ஜூலை 29, 2024 03:29 AM

கோவை;லோக்சபா தேர்தலில் கோவை தொகுதியில் வெற்றி பெற, காரணமாக இருந்த தொண்டர்களை ஊக்குவிக்கும் வகையில், சிங்காநல்லுார் பகுதி தி.மு.க., சார்பில் கிடா விருந்து பரிமாறப்பட்டது.
கோவை லோக்சபா தொகுதியில், போட்டியிட்டு வெற்றி பெற்றார் கணபதி ராஜ்குமார். இவ்வெற்றி, சிங்காநல்லுார் பகுதி கழகம் 1 சார்பில், நேற்று கொண்டாடப்பட்டது.
இதற்காக, ஒண்டிப்புதுாரிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்களுக்கு பரிசுப்பொருள் வழங்கப்பட்டது. பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். கிடா வெட்டி கறி விருந்து பரிமாறப்பட்டது.
முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திக், கோவை தொகுதி எம்.பி.,ராஜ்குமாருக்கு நினைவுப்பரிசு வழங்கினார். கட்சியினர் பலர் பங்கேற்றனர்.