/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
/
அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 21, 2024 12:07 AM

கோவை:அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி, புல்லுக்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாநகராட்சியின், 86 வார்டு, அன்பு நகர், அற்புக நகர் பகுதிகளில், ரோடு வசதி, மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. அப்பகுதியில் அங்கன்வாடி, ஆரம்ப சுகாதார மையம் உள்ளிட்டவையும் இல்லை என, அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. புல்லுக்காடு பகுதியில், செயல்படும் மாநகராட்சி குப்பை கிடங்கு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், நாய்களுக்கான கருத்தடை மையம் ஆகியவற்றை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, எஸ்.டி.பி.ஐ., மாவட்ட பொது செயலாளர் காதர் தலைமை வகித்தார்.