/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சங்கனுார் பள்ளம் சீரமைப்பு விரைந்து முடிக்க உத்தரவு
/
சங்கனுார் பள்ளம் சீரமைப்பு விரைந்து முடிக்க உத்தரவு
சங்கனுார் பள்ளம் சீரமைப்பு விரைந்து முடிக்க உத்தரவு
சங்கனுார் பள்ளம் சீரமைப்பு விரைந்து முடிக்க உத்தரவு
ADDED : ஜூன் 26, 2024 01:40 AM
கோவை:சங்கனுார் பள்ளம் வாய்க்காலை, ரூ.49 கோடி மதிப்பில், தூர்வாரி சீரமைக்கும் பணியில், மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
16.6 கி.மீ., நீளமுடைய இந்த வாய்க்கால், தடாகம் பகுதியில் துவங்கி, கவுண்டம்பாளையம், ரத்தினபுரி, ஆவாரம்பாளையம், நவ இந்தியா, அவிநாசி ரோடு, திருச்சி ரோடு ஆகியவற்றின் வழியாக சென்று நொய்யலாற்றில் கலக்கிறது.
பராமரிப்பு இல்லாதது, ஆக்கிரமிப்பு, வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து வரும் கழிவுநீர் கலப்பு உள்ளிட்டவற்றால், இந்த வாய்க்கால் பாழடைந்தது. இதனால் பருவமழைக்காலங்களில் வெள்ளம் ஏற்பட்டு, குடியிருப்புகளுக்குள் புகும் நிலை ஏற்பட்டது.
சங்கனூர் பள்ளத்தை தூர்வாரி, சீரமைக்க மாநகராட்சி திட்டமிட்டு, முதற்கட்டமாக ரூ.49 கோடியில், தூர்வாரி சீரமைக்கும் பணிக்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டன. மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று ஆய்வு செய்தார்.பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'முதல் கட்டத்தில், மேட்டுப்பாளையம் ரோட்டிலிருந்து காந்திபுரம், 7-வது வீதி வரை 2.3 கி.மீ., தூரம் சீரமைக்கப்படுகிறது. தற்போது 1.7 கி.மீ., தூரத்துக்கு பணிகள் முடிந்துள்ளன. பள்ளத்தை தூர்வாரி, அடைப்புகளை அகற்றி தடுப்புச்சுவரும் கட்டப்படுகிறது' என்றார்.