/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகராட்சியில் கொசு ஒழிப்பு பணி துாய்மைப் பணியாளர்கள் தீவிரம்
/
நகராட்சியில் கொசு ஒழிப்பு பணி துாய்மைப் பணியாளர்கள் தீவிரம்
நகராட்சியில் கொசு ஒழிப்பு பணி துாய்மைப் பணியாளர்கள் தீவிரம்
நகராட்சியில் கொசு ஒழிப்பு பணி துாய்மைப் பணியாளர்கள் தீவிரம்
ADDED : ஜூன் 08, 2024 12:20 AM

பொள்ளாச்சி;தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், பொள்ளாச்சி நகராட்சியில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு பணி தீவிரமடைந்துள்ளது.
பொள்ளாச்சியில், தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பரவும் நோய்களை தடுக்கும் வகையிலும், நகராட்சியில் கொசு ஒழிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கொசு ஒழிப்பு பணியாளர்கள் வாயிலாக, வீடு வீடாக 'அபேட்' மருந்து தெளிப்பது, வாகனங்களில் சென்று கொசு மருந்து அடிப்பது, கழிவுநீர் சாக்கடைகளில் கொசு மருந்து தெளிப்பது என, கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.
நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பொள்ளாச்சி நகரில், கோடை மழையின் தாக்கம் அதிகமாக இருந்தது. தற்போது, தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
வீடுகள் தோறும் செல்லும்துாய்மைப் பணியாளர்கள், டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக உள்ள பழைய பொருட்களை அப்புறப்படுத்துகின்றனர். குடியிருப்பு வீதிகளில் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றியும் வருகின்றனர்.
மழைநீர் தேக்கமடையும் இடங்கள் கண்டறியப்பட்டு, இயந்திரங்கள் வாயிலாக கொசு மருந்து அடிக்கப்படுகின்றன. இதுதவிர, பொதுமக்கள் தண்ணீர் சேமிக்கும் தொட்டி, டிரம், பாத்திரம் ஆகியவற்றை மூடி வைக்க வேண்டும். மழைக்காலத்தில் காய்ச்சிய நீரையே பருக வேண்டும். காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.