/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போக்குவரத்து நெரிசலில் சிக்கி பள்ளி மாணவர்கள் பரிதவிப்பு
/
போக்குவரத்து நெரிசலில் சிக்கி பள்ளி மாணவர்கள் பரிதவிப்பு
போக்குவரத்து நெரிசலில் சிக்கி பள்ளி மாணவர்கள் பரிதவிப்பு
போக்குவரத்து நெரிசலில் சிக்கி பள்ளி மாணவர்கள் பரிதவிப்பு
ADDED : ஜூலை 11, 2024 10:21 PM

வால்பாறை : வால்பாறையில், பள்ளி மாணவர்கள் தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வால்பாறை போஸ்ட் ஆபீஸ் முதல், புதிய பஸ் ஸ்டாண்ட் வரை, ரோட்டோரத்தின் இருபக்கங்களிலும், விதிமுறையை மீறி வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்படுகின்றன. குறிப்பாக, போஸ்ட் ஆபீஸ், காந்திசிலை வளாகம், ஸ்டேன்மோர் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில், தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால், காலை, மாலை நேரத்தில் பள்ளி மாணவர்கள் ரோட்டை கடக்க முடியாமல் பரிதவிக்கின்றனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'வால்பாறை நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, பள்ளி மாணவர்களை அழைத்து செல்லும் வாகனங்களை, போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில் நிறுத்த வேண்டும்.
மேலும், காலை, மாலை நேரங்களில் இருசக்கர வாகனங்கள், சுற்றுலா வேன்களை பி.ஏ.பி., ரோடு வழியாக மாற்றுவழிப்பாதையில் இயக்கினால், போஸ்ட் ஆபீஸ் ரோட்டில் பள்ளி நேரத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும்,' என்றனர்.