/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
25 நாட்களில் 16 டன் பட்டுக்கூடு விற்பனை
/
25 நாட்களில் 16 டன் பட்டுக்கூடு விற்பனை
ADDED : ஜூன் 26, 2024 01:59 AM
கோவை;பட்டுவளர்ச்சித்துறையின் கீழ், அரசு பட்டுக்கூடு அங்காடியில் நேற்று, 500 கிலோ நுாற்பாளர்களால் ஏலம் எடுக்கப்பட்டது.
பட்டுப்புழு உற்பத்தி விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள் மகசூலாகும், பட்டுக்கூடுகளை அந்தந்த மாவட்டங்களில் உள்ள, அரசு பட்டுக்கூடு அங்காடிகளில் விற்பனை செய்வது வழக்கம். இவர்களின் பட்டுக்கூடு தினசரி ஏலமிடப்பட்டு, நுாற்பாளர்களுக்கு வழங்கப்படும்.
கோவையில் பாலசுந்தரம் சாலையில் உள்ள, பட்டுவளர்ச்சித்துறையில் நேற்று பட்டுக்கூடு ஏலம் விடப்பட்டது. இதில், நுாற்பாளர்கள்5 பேர், விவசாயிகள் 6 பேர் பங்கேற்றனர். அதிகபட்சமாக, கிலோ 479 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 401 ரூபாய்க்கும் விற்பனையானது.
மாவட்ட பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் திலகவதி கூறுகையில், ''ஏலத்தில் 500 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. கடந்த 25 நாட்களில், 16 டன் பட்டுக்கூடு விற்பனை செய்யப்பட்டுள்ளது. வெயில் தாக்கம் சற்று குறைந்துள்ளதால், பட்டுக்கூடு தரமும் சற்று மேம்பட்டுள்ளது,'' என்றார்.