/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒடிசாவில் தொடர் கொள்ளை: திருச்சியை சேர்ந்த 4 பேர் கைது
/
ஒடிசாவில் தொடர் கொள்ளை: திருச்சியை சேர்ந்த 4 பேர் கைது
ஒடிசாவில் தொடர் கொள்ளை: திருச்சியை சேர்ந்த 4 பேர் கைது
ஒடிசாவில் தொடர் கொள்ளை: திருச்சியை சேர்ந்த 4 பேர் கைது
ADDED : ஜூலை 20, 2024 03:57 AM

ஒடிசா மாநிலத்தின் ஷாஹீத் நகரில் திருடப்பட்ட மொபைல் போன்களை, மர்ம நபர்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், நான்கு பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் நால்வரும் தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மோஹித், 48, மூர்த்தி, 42, நந்தகுமார், 47, தினேஷ், 47, என்பது தெரிந்தது.
இவர்கள் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டுள்ள கார்களின் கண்ணாடியை உடைத்து, உள்ளே இருக்கும் பொருட்களை திருடுவது, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளை குறிவைத்து மொபைல் போன் மற்றும் விலைமதிப்புள்ள பொருட்களை கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர்.
ஒடிசாவில் மட்டும், இதுபோன்ற 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் கொள்ளைகளில் இந்த கும்பல் ஈடுபட்டது தெரிந்தது.
கைதான நபர்களிடம் இருந்து நான்கு லேப்டாப் கம்ப்யூட்டர்கள், 25 மொபைல் போன்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
- நமது நிருபர் -