/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில போட்டிகளில் ஜொலிக்கும் மாணவர்கள் தேசிய போட்டியில் பங்கேற்காமல் தவிப்பு
/
மாநில போட்டிகளில் ஜொலிக்கும் மாணவர்கள் தேசிய போட்டியில் பங்கேற்காமல் தவிப்பு
மாநில போட்டிகளில் ஜொலிக்கும் மாணவர்கள் தேசிய போட்டியில் பங்கேற்காமல் தவிப்பு
மாநில போட்டிகளில் ஜொலிக்கும் மாணவர்கள் தேசிய போட்டியில் பங்கேற்காமல் தவிப்பு
ADDED : ஜூன் 16, 2024 11:39 PM
பொள்ளாச்சி;இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் நடத்தும் தேசிய போட்டிகள் ஒவ்வொன்றிலும், அனைத்து வயது பிரிவு மாணவ, மாணவியர் அணிகள் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில், ஆண்டுதோறும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, குழு மற்றும் தடகளப்போட்டிகள், குறுமைய, மாவட்ட, மண்டல போட்டிகளைத்தொடர்ந்து, மாநில அளவிலும் போட்டிகள் நடத்தி முடிக்கப்படுகிறது.
இப்போட்டியானது, 14, 17 மற்றும் 19 வயது பிரிவுகளின் கீழ், மாணவர், மாணவியர் என, தனித்தனியாக நடத்தப்படுகிறது.
ஆனால், ஒவ்வொரு ஆண்டும், மாநில போட்டிக்குப்பின், இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் நடத்தும் தேசிய போட்டிகளில் பங்கேற்க, அனைத்து வயது பிரிவு மாணவ, மாணவியரும் செல்வதில்லை.
எனவே, நடப்பு கல்வியாண்டு, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், குறு மைய போட்டிகள் துவங்க உள்ள நிலையில், ஒவ்வொரு விளையாட்டிலும், தேசிய போட்டிகள் வரை, வெற்றி பெறும் மாணவ, மாணவியர் அணிகளின் பங்களிப்பு உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
உடற்கல்வி ஆசிரியர்கள் கூறியதாவது: ஆண்டுதோறும், ஒவ்வொரு விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவியரும் அந்தந்த வயது பிரிவின் கீழ் மாநில அளவில் வெற்றியைத் தக்க வைத்துக்கொள்கின்றனர்.
அதற்குப் பின், தேசிய போட்டிகளில் பங்கேற்பதை உறுதி செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.
மாநில அளவில் சீனியர் பிரிவு போட்டிகளில் வென்ற, ஏதேனும் குறிப்பிட்ட விளையாட்டு அணியினர் மட்டுமே தேசிய போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
எனவே, நடப்பு கல்வியாண்டு அந்த நிலையை மாற்ற வேண்டும். மாறாக, மாநில போட்டிகளில் வெல்லும் அனைத்து வயது பிரிவு மாணவ, மாணவியரும் தேசிய போட்டிகளில் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை, பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.