/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம்
/
சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம்
ADDED : ஜூன் 08, 2024 12:05 AM
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு வட்டாரத்துக்கு உட்பட்ட விவசாயிகள், சொட்டு நீர் பாசனம் அமைக்க தோட்டக்கலை துறை சார்பில் மானியம் வழங்கப்படுகிறது.
கிணத்துக்கடவு வட்டாரத்துக்கு உட்பட்ட பகுதிகள் பெருமளவு விவசாயம் சார்ந்து உள்ளது. விவசாயிகள் பெரும்பாலும், சொட்டு நீர் பாசன முறைக்கு மாறியுள்ளனர். இதனால், நிலத்தடிநீர் சேமிக்கப்படுவதுடன், தென்னை மரத்துக்கு தேவையான அளவுக்கு நீர்பாசனம் செய்யப்படுகிறது.
இந்த நீர் மேலாண்மை முறையை ஊக்குவிக்கும் பொருட்டு, விவசாயிகளுக்கு அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க தோட்டக்கலை துறை சார்பில் மானியம் வழங்கப்படுகிறது.
240 ஹெக்டேருக்கு, 2.15 கோடி மானியம் வழங்கப்படுகிறது. இதில், சொட்டு நீர் பாசனம் அமைக்க, சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீதம் மானியமும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இத்தகவலை கிணத்துக்கடவு தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ஜமுனாதேவி தெரிவித்தார்.