/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால்வாயில் சிக்கி தவித்த குட்டியானை: வனத்துறையினர் மீட்டு தாயிடம் சேர்ப்பு

UPDATED : ஜூன் 24, 2024 07:15 AM
ADDED : ஜூன் 24, 2024 07:12 AM

கூடலுார் : முதுமலை அப்பர் கார்குடி அருகே, கால்வாயில் தவறி விழுந்து வெளியே வர முடியாமல் தவித்த, குட்டி யானையை வனத் துறையினர் மீட்டு தாயிடம் சேர்த்தனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் அப்பர் கார்குடி அருகே, பிறந்து சில நாட்களான குட்டி யானை நேற்று (ஜூன் 23) தாயுடன் உலா வந்தது. பிற்பகல் குட்டி யானை, எதிர்பாராமல் அப்பகுதியில் உள்ள கால்வாயில் தவறி விழுந்து, வெளியே வர முடியாமல் தவித்தது. தாய் யானை பிளிறியபடி அதனை மீட்க போராடியது.