/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டில் தோட்டம்... நர்சரியில் கூட்டம்
/
வீட்டில் தோட்டம்... நர்சரியில் கூட்டம்
ADDED : ஜூலை 11, 2024 11:59 PM

'அக்ரி இன்டெக்ஸ்' கண்காட்சியின் ஒரு பகுதியாக, நர்சரிக்கு என தனி அரங்கு ஏற்படுத்தப்பட்டிருந்தது.
இதில், புதிய தோட்டக்கலை ரகங்கள், இயற்கை உரங்கள், விரைவில் மகசூல் தரக் கூடிய, சாத்துக்குடி, பலா, கொய்யா, எலுமிச்சை, அத்தி உட்பட ரகங்கள் வைக்கப்பட்டிருந்தன. அனைத்து வகையான மரம் மற்றும் பழப்பயிர் ரகங்களை, புதிய தொழில்நுட்ப முறையில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருவது, குட்டை மற்றும் நெட்டை ரகத்தின் சிறப்பு இயல்புகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.
மாடித் தோட்டம் அமைக்கும் முறை, அதில் என்னென்ன செடிகள் நடவு செய்யலாம், செடிகளை பாதுகாக்கும் முறை குறித்து விளக்கப்பட்டது.விவசாயிககளின் வருமானத்தை அதிகரித்து, நாட்டின் பசுமைப் பண்ணை பரப்பை அதிகரித்தல், நதிகளை உயிர்பித்தல், மண் வளத்தை மேம்படுத்துதல் ஆகிய உயரிய நோக்கங்களுக்காக துவங்கப்பட்ட காவேரி கூக்குரல் இயக்கம், மரம் சார்ந்த விவசாயம் செய்ய விவசாயிகளை ஊக்குவித்து வருகிறது. இதற்காக, தமிழகம் முழுவதும் உள்ள 50க்கும் மேற்பட்ட ஈஷா நாற்றுப் பண்ணைகளில், இயற்கை முறையில் உருவாக்கப்பட்ட டிம்பர் மரக்கன்றுகள், விவசாயிகளுக்கு, ரூ.3 என மானிய விலையில் வழங்கப்பட்டன.
தவிர, பூச்சி உண்ணும் தாவரங்கள், குரோட்டான்ஸ், போன்சாய் வகைமரங்கள், பார்வையாளர்களை கவர்ந்தன. நர்சரியில் வைக்கப்பட்டிருந்த செடி, மர வகைகளை, பார்வையாளர்கள் வாங்கிச் சென்றனர்.