/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டை 'மில்லிங்' செய்ததை மறந்த நெடுஞ்சாலைத்துறை
/
ரோட்டை 'மில்லிங்' செய்ததை மறந்த நெடுஞ்சாலைத்துறை
ADDED : ஜூலை 29, 2024 03:25 AM

தொண்டாமுத்தூர்;இக்கரை போளுவாம்பட்டியில், ரோட்டை 'மில்லிங்' செய்து, 6 மாதங்களாகியும், சீரமைக்காததால், வாகன ஓட்டிகள் திண்டாடி வருகின்றனர்.
இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில், அம்மன் கோவில் முதல் போளுவாம்பட்டி ஊராட்சி அலுவலகம் வரை, 400 மீட்டர் சாலை உள்ளது.
இந்நிலையில், தொண்டாமுத்தூர் மற்றும் சிறுவாணி ரோடு, ஹைஸ்கூல்புதூர் வழியாக வரும் வாகன ஓட்டிகள், போக்குவரத்து நெரிசல் இன்றி, கோட்டைக்காடு, செம்மேடு அடைய, இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
மாநில நெடுஞ்சாலைத்துறையின் பராமரிப்பில் உள்ள இந்த சாலையை, சீரமைக்க, கடந்த, பிப்., மாதம், மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், 'மில்லிங்' செய்யப்பட்டது.
ஆனால், அதன்பின் சாலை சீரமைப்பு பணி, கிடப்பில் போடப்பட்டது. அதன்பின், லோக்சபா தேர்தல், தேர்தல் முடிவுகள் என தொடர்ந்து, இழுபறி ஏற்பட்டு வந்தது.
தற்போது, மழையையும் ஓர் காரணமாக கூறி வருகின்றனர். 'மில்லிங்' செய்து, 6 மாதங்களாக சாலையை சீரமைக்காததால், அவ்வழியாக செல்லும், இருசக்கர வாகன ஓட்டிகள், இச்சாலையில் ஒவ்வொரு நாளும் திண்டாடி வருகின்றனர்.
இச்சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.