/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விரைவில் கைமாறுகிறது அரசு மகளிர் விடுதி பொறுப்பு
/
விரைவில் கைமாறுகிறது அரசு மகளிர் விடுதி பொறுப்பு
ADDED : ஜூலை 14, 2024 01:02 AM
கோவை;சமூகநலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும், அரசு மகளிர் விடுதிகள் அனைத்தும் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள், நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கவுள்ளது.
மாநில அரசின் கட்டுப்பாட்டில், 21 பணிபுரியும் மகளிர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், சென்னையில் 25 ஆயிரம், பிற இடங்களில், 15 ஆயிரம் சம்பளம் பெறும் மகளிர் இங்கு தங்க தகுதியுள்ளவர்கள்.
சென்னையில் மாதம், 300 ரூபாயும், பிற மாவட்டங்களில் 200 ரூபாயும் வாடகை வசூலிக்கப்படுகிறது. இங்கு மின்சாரம், உணவு கட்டணங்களை தங்கியிருப்பவர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இந்நிலையில், 'தோழிகள் விடுதி' என்ற பெயரில், புதிய விடுதிகள் ஏழு இடங்களில் கட்டப்படவுள்ளன. கோவையில் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லுாரியில், தோழிகள் விடுதி கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இச்சூழலில், மகளிர் பாதுகாப்பை மையமாக கொண்டு, அனைத்து அரசு மகளிர் விடுதிகளின் பொறுப்புகளையும், தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதி நிறுவனம் எடுத்துக்கொள்ளவுள்ளது.
சமூகநலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அரசு மகளிர் விடுதி, தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் கட்டுப்பாட்டில் மாறவுள்ளது. இது தொடர்பான விபரங்களை கேட்டுள்ளனர்' என்றார்.