/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்று பட்டதாரி ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு
/
இன்று பட்டதாரி ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு
இன்று பட்டதாரி ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு
இன்று பட்டதாரி ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு
ADDED : ஜூலை 11, 2024 11:50 PM
கோவை: பள்ளிக் கல்வித் துறை சார்பில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதலுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு டவுன்ஹாலில் உள்ள துணி வணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடக்கிறது.
தமிழகம் முழுவதும் பணிமூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு இன்று நடக்கவுள்ளது. மாநிலம் முழுவதும் இருந்து எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்த கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
பள்ளிக் கல்வித் துறை சார்பில், கோவை மாவட்டத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, டவுன்ஹாலில் உள்ள துணி வணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடக்கிறது. முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி தலைமையில் கலந்தாய்வு நடக்க உள்ளது.