/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : ஜூன் 09, 2024 12:29 AM

கும்பாபிஷேக விழா
மதுக்கரை, வெள்ளலுார், பேச்சியம்மன் கோவிலில்,கும்பாபிஷேக விழா நடக்கிறது. இன்று, காலை, 8:00 மணி முதல், விமானங்கள் மற்றும் பரிவார மூர்த்திகள் மற்றும் மூலவர் விமானம், பேச்சியம்மனுக்கு கும்பாபிஷேக விழா நடக்கிறது. தொடர்ந்து மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.
மகோற்சவம்
பெரியதடாகம், லலிதாம்பிகை கோவில், நிலைவாசற்கல் பிரதிஷ்டை மகோற்சவம் இன்று நடக்கிறது. காலை, 11:00 மணிக்கு மேல், 12:00 மணிக்குள் பிரதிஷ்டை நடக்கிறது. சுவாமி ததேவானந்த சரஸ்வதி கலந்துகொள்கிறார்.
குடமுழுக்கு விழா
சங்கனுார், செல்வவிநாயகர், ஆதிகோனியம்மன், மாகாளியம்மன் கோவில்களில் குடமுழுக்கு விழா இன்று நடக்கிறது. காலை, 8:00 முதல் 11:35 மணிக்குள், சிறப்பு பூஜைகளை தொடர்ந்து, விமான கும்பாபிஷேகம், மூலமூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
இலக்கியச்சந்திப்பு
சர்க்கார் சாமக்குளம், கவையன்புதுார் தமிழ்ச்சங்கம் சார்பில், 61வது மாத அமர்வு நடக்கிறது. எஸ்.எஸ்.குளம், இன்போ பொறியியல் கல்லுாரியில், காலை, 9:30 மணிக்கு நிகழ்ச்சி துவங்குகிறது. எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் கலந்துகொண்டு பல்வேறு தலைப்புகளில் உரையாற்றுகின்றனர்.
அமைதியின் அனுபவம்
தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் மூலம் மன அமைதியை அனுபவிக்கலாம். அண்ணாசாலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங்கம் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11:00 மணிக்கு, சத்சங்கம் நடக்கிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.,நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது.
* குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.