ADDED : ஜூலை 11, 2024 11:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : ஒடிசா மாநிலம் புரி ஜெகன்நாதர் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி, கோவையில், இஸ்கான் அமைப்பு சார்பில், நாளை தேரோட்டம் நடைபெறுகிறது.
நாளை மதியம் 2:00 மணிக்கு தேர்முட்டியில் தேரோட்டம் துவங்குகிறது. தேரில் ஜெகன்நாதர், பலதேவர், சுபத்ரா தேவி ஆகியோரின் மூல விக்கிரகங்களுடன், பிரமாண்ட தேர் பவனி வருகிறது.
ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்பகவுடர் வீதி வழியாக மீண்டும் தேர் நிலையை அடைகிறது. மூல விக்ரகங்களே, தேரில் வலம் வரும் ஒரே திருவிழா இதுவாகும். தேர் பவனி வரும்போது, சிறப்பு பஜனை, ஹரி நாம சங்கீர்த்தனம், இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
தேர் நிலையை அடைந்ததும், மூல விக்ரகங்கள் மீண்டும் ஜெகன்நாதர் கோவிலில் வைக்கப்படும். கோவிலில் சிறப்பு பூஜைகள், சொற்பொழிவுகள் நடைபெறவுள்ளது.