/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூனு ரோடு சந்திப்பில் வாகன நெரிசல் தினமும் தடுமாறும் ஓட்டுநர்கள்
/
மூனு ரோடு சந்திப்பில் வாகன நெரிசல் தினமும் தடுமாறும் ஓட்டுநர்கள்
மூனு ரோடு சந்திப்பில் வாகன நெரிசல் தினமும் தடுமாறும் ஓட்டுநர்கள்
மூனு ரோடு சந்திப்பில் வாகன நெரிசல் தினமும் தடுமாறும் ஓட்டுநர்கள்
ADDED : ஜூன் 18, 2024 11:08 PM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, தெப்பக்குளம் வீதி அருகே மூன்று ரோடு சந்திப்பு பகுதியில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், வாகன ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பொள்ளாச்சி கந்தசாமி பூங்கா ரோடு, தெப்பக்குளம் வீதி, பத்ரகாளியம்மன் கோவில் ரோடு சந்திப்பு பகுதி வழியாக, தினமும், கனரக வாகனங்கள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் என, நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சதிப்பு பகுதியில் உள்ள பாலத்தின் பக்கவாட்டு சுவர்கள் பராமரிப்பின்றி உள்ளதுடன், ரோடு மோசமாக உள்ளது. பெரிய குழியாக உள்ளதால், விபத்துகள் சர்வசாதாரணமாக நடக்கின்றன. இந்த ரோடு சந்திப்பு பகுதி குறுகலாக உள்ளதால், மூன்று பக்கமும் இருந்து வாகனங்கள் வரும் போது, நெரிசல் ஏற்படுகிறது.
எதிரே வரும் வாகனங்களுக்கு, மற்ற வாகனங்கள் வழி விட்ட பிறகே, பயணத்தை தொடரும் நிலை உள்ளது. வாகனங்கள் செல்ல போதிய இடவசதியில்லாமல் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து நின்றால் பின்னோக்கி கூட செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நின்று விடும். அதன் பின், வாகன ஓட்டுநர்கள் சிலரே போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபடுவதும் வாடிக்கையாகி உள்ளது.
பொதுமக்கள் கூறுகையில், 'மூன்று ரோடு சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாகி உள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் மனது வைக்க வேண்டும்.அல்லது ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்ய வேண்டும்.
ரோடு மோசமாக உள்ளதால், வாகனங்கள் குழியில் இறங்கி செல்வதற்குள் பின்னே வரும் வாகனங்கள் மோதும் சூழல் உள்ளது. இந்த சந்திப்பு பகுதியை விரிவுப்படுத்தவும், ரோட்டை சீரமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், போக்குவரத்து நிறைந்த காலை மற்றும் மாலை நேரங்களில் போலீசார் கண்காணிப்பு செய்து, போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.