/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மரக்கிளை மீது லாரி மோதல்: போக்குவரத்து பாதிப்பு
/
மரக்கிளை மீது லாரி மோதல்: போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜூன் 17, 2024 12:29 AM
கோவை;உப்பிலிபாளையம் மந்தை கருப்பராயன் கோவில் வளாகத்தில் வளர்ந்துள்ள மரத்தின் கிளை மீது 'கன்டெய்னர்' லாரி மோதியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற தி.மு.க., முப்பெரும் விழா 'கொடிசியா' மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதனால் அவிநாசி ரோடு, திருச்சி ரோடு உள்ளிட்ட ரோடுகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. ஜி.வி., ரெசிடென்ஸி அருகே உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள மந்தை கருப்பராயன் கோவில் வழியாக வந்த கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட 'கன்டெய்னர்' லாரி, கோவில் வளாகத்தில் வளர்ந்திருந்த மரத்தின் கிளை மீது மோதியது.
சில நிமிடங்கள் கழித்து மரம் ரோட்டின் குறுக்கே விழுந்தது. நல்ல வேளையாக வாகனங்கள் அந்நேரம் வராததால் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும், மின் கம்பத்தில் இருந்து வீடுகளுக்கு செல்லும் மின் ஒயர்கள் மீதும் மரக்கிளை விழுந்ததில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் மரக்கிளையை வெட்டி அகற்றினர். இதனால், இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக அவ்வழியே வாகன போக்குவரத்து தடைபட்டது. மேலும், மின் இணைப்பு துண்டிப்பை சரி செய்யும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டனர்.