/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எங்கள் தெருவுக்கு எப்போது விமோசனம்?
/
எங்கள் தெருவுக்கு எப்போது விமோசனம்?
ADDED : ஜூலை 14, 2024 10:50 PM
கோவை;ஆவாரம்பாளையத்தில் மாதக்கணக்கில் அடைக்கப்பட்டுள்ள தெருவை, பயன்பாட்டுக்கு திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக, மாநகராட்சி 28வது வார்டு, ஆவாரம்பாளையம் தெற்கு 2வது வீதி பொதுமக்கள் கூறியதாவது:
இந்தத் தெருவில் பாலம் சிதிலமடைந்ததால், புதிய பாலம் கட்டுவதற்காக இடிக்கப்பட்டது. இதனால், பிரதான சாலைக்கு வர முடியாமல் சுற்றிச் சுற்றி வருகிறோம்.
புதிய பாலம் கட்டுமானப் பணியும் தாமதமானது. இந்தத் தெருவைப் பயன்படுத்த முடியாமல் மாதக்கணக்கில் அவதிப்படுகிறோம். கட்டுமானப் பணி முடிந்துள்ள நிலையில், இடிபாடுகளை அகற்றி, உடனடியாக பாலத்தை போக்குவரத்துக்கு திறக்க வேண்டும்.
இவ்வாறு, பொதுமக்கள் தெரிவித்தனர்.