/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நள்ளிரவில் வீட்டை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானைகள்; உயிர் தப்பிய தொழிலாளி குடும்பம்

ADDED : ஆக 07, 2024 04:06 AM

தொண்டாமுத்தூர்: வண்டிக்காரனூரில், தோட்டத்தில் உள்ள வீட்டை, காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தியதில், அதிர்ஷ்டவசமாக, தொழிலாளியின் குடும்பத்தினர் உயிர்தப்பினர்.
போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட, தொண்டாமுத்தூர் அடுத்த வண்டிக்காரனூரில் உள்ள சண்முகசுந்தரம் என்பவரின் தோட்டத்தில், சந்துரு என்பவர், மனைவி புவனேஸ்வரி மற்றும் மூன்று குழந்தைகளுடன் தங்கி வேலை செய்து வருகிறார்.
நேற்றுமுன்தினம் இரவு வழக்கம்போல, தனது குடும்பத்துடன் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு சுமார் 11:30 மணியளவில், இரண்டு காட்டு யானைகள், ஒரு குட்டியுடன் வாழை தோட்டத்திற்குள் புகுந்துள்ளன.
காட்டு யானைகள், சந்துரு தங்கியிருந்த சிமென்ட் சீட் வீட்டின் முன்பக்கத்தை உடைத்து சேதப்படுத்தி, வீட்டிற்குள் அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை தேடியுள்ளது. காட்டு யானையின் சப்தம் கேட்டதும், விழித்துக்கொண்ட சந்துரு, தனது மனைவி மற்றும் குழந்தைகளையும் எழுப்பி, ஒரு மூலையில் பதுங்கிக்கொண்டார்.
அச்சத்துடன் இருந்த சந்துரு, இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். வனத்துறையினர் வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டதால், அருகிலுள்ள குமார் என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குமார், தனது வாகனத்தில் வந்து, அதிக ஒலி எழுப்பி காட்டு யானைகளை விரட்டியுள்ளார். அதன்பின், வனத்துறையினர் வந்து, காட்டு யானைகளை குப்பேபாளையம் வனப்பகுதிக்குள் விரட்டினர்.