/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கே.பி.ஆர்., கல்லுாரியில் யோகா தின கொண்டாட்டம்
/
கே.பி.ஆர்., கல்லுாரியில் யோகா தின கொண்டாட்டம்
ADDED : ஜூன் 23, 2024 12:08 AM

கோவை:அரசூர், கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் நடந்த, சர்வதேச யோகா தின விழாவில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் யோகா பயற்சியில் பங்கேற்றனர்.
கஜாநந்தா அறக்கட்டளையின் மேலாளர் பழனிசாமி, யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள், முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடம் விரிவாக பேசினார்.
அறக்கட்டளையின் சமூகவியல் அதிகாரி சாரதா, யோகா பயிற்சியாளர் பிருந்தா ஆகியோர் பல்வேறு ஆசனங்களை, மாணவர்களுக்கு செய்து காண்பித்தனர். மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், மூச்சு பயிற்சியும் கற்பிக்கப்பட்டது.
கல்லுாரி முதல்வர் சரவணன், 'உடல், மன நலத்தோடு நீண்ட கால வாழ்விற்கு யோகா பயிற்சிகள் இன்றியமையாதது' என்றார்.