/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருச்செந்தூருக்கு 10 சிறப்பு பஸ்கள்
/
திருச்செந்தூருக்கு 10 சிறப்பு பஸ்கள்
ADDED : ஜூன் 27, 2025 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் இருந்து, திருச்செந்தூருக்கு 10 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளதாக, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு போக்குவரத்து கழகம் மேட்டுப்பாளையம் கிளை அலுவலகம் ஒன்றில், 31 டவுன் பஸ்கள், 30 மப்சல் பஸ்கள் என மொத்தம் 61 பஸ்கள், இயக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஜூலை 7ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்க உள்ளதை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் இருந்து திருச்செந்தூருக்கு, 10 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.