/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வால்பாறையில் அரசு பஸ்கள் மோதல்; டிரைவர்கள் உட்பட 20 பேர் காயம்
/
வால்பாறையில் அரசு பஸ்கள் மோதல்; டிரைவர்கள் உட்பட 20 பேர் காயம்
வால்பாறையில் அரசு பஸ்கள் மோதல்; டிரைவர்கள் உட்பட 20 பேர் காயம்
வால்பாறையில் அரசு பஸ்கள் மோதல்; டிரைவர்கள் உட்பட 20 பேர் காயம்
ADDED : ஜன 17, 2024 12:32 AM

வால்பாறை;கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள வெள்ளமலை டாப் டிவிஷன் எஸ்டேட்டிலிருந்து நேற்று மாலை, 6:10 மணிக்கு பயணியரை ஏற்றிக்கொண்டு வால்பாறை நகருக்கு அரசு பஸ் வந்தது.
போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள நிறுத்தத்தில் பயணியரை இறக்கி விட்டு, இறக்கத்தில் பஸ் சென்று கொண்டிருந்த போது, பஸ்சில் திடீரென்று பிரேக் பிடிக்கவில்லை.
இதனால் சுதாரித்துக்கொண்ட பஸ் டிரைவர் செல்வக்குமார், எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேகத்தில், கோவையை நோக்கி வந்த அரசு பஸ் மீதும் மோதியது.
இந்த விபத்தில் அரசு பஸ் டிரைவர் செல்வக்குமார், கோவை நோக்கி சென்ற அரசு பஸ் டிரைவர் ராமகிருஷ்ணன், மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த முருகன் மற்றும் பயணியர், 20 பேர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
விபத்து காரணமாக, வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இவர்கள் அனைவரும், வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.