/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
25 கிலோ கஞ்சா பறிமுதல்; இருவர் கைது
/
25 கிலோ கஞ்சா பறிமுதல்; இருவர் கைது
ADDED : செப் 15, 2025 11:27 PM
போத்தனூர்; செட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ.இளவேந்தனுக்கு, மலுமிச்சம்பட்டி அருகே கஞ்சா விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. போலீசாருடன் அங்கு சென்ற எஸ்.ஐ. மலுமிச்சம்பட்டி சிட்கோ நுழைவாயில் பின்புறம் கண்காணித்தார். சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஒருவரை விசாரித்தார்.
அவர் ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரியை சேர்ந்த கண்டலா ராம லட்சுமணன், 20 என்பதும், ஐந்து கிலோ கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதும் தெரிந்தது. அவரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே குமரன் பூங்கா முன், 20 கிலோ கஞ்சாவுடன் மந்த வீரபாபு, 21 என்பவர் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். போலீசார் அவரையும் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும், வழக்கு பதிவு செய்யப்பட்டது.