/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண்களை கட்டி போட்டு 50 சவரன், பணம் கொள்ளை
/
பெண்களை கட்டி போட்டு 50 சவரன், பணம் கொள்ளை
ADDED : ஜன 26, 2024 01:24 AM

ஆர்.எஸ்.,புரம்:கோவை ஆர்.எஸ்.,புரம் மேற்கு ஆரோக்கியசாமி வீதியை சேர்ந்தவர் கமலேஷ், 50, மொத்த பருத்தி வியாபாரி. தை பூசத்தை முன்னிட்டு நேற்று மருதமலை கோவிலுக்கு சென்று இருந்தார்.
வீட்டில் முதல் தளத்தில் அவரது மனைவி ரூபல், மகன் மிகர் மற்றும் வேலைகார பெண் இருந்தனர். பகல், 1:00 மணிக்கு இரண்டு கார் மற்றும் பைக்கில், 12 பேர் வந்தனர்.
அதில், சிலர் வீட்டிற்குள் நுழைந்து கமலேசின் மனைவி, மகன் மற்றும் வேலைக்கார பெண்ணை, கத்தியை காட்டி மிரட்டி கட்டிப்போட்டனர்.
வீட்டின் கீழ்தளத்தில் இருந்த அலுவலகத்தில் இருந்த 13 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்தனர். வீட்டின் பீரோவை உடைத்து, 50 சவரன் தங்க நகைகளை கொள்ளைஅடித்து தப்பினர்.
கட்டுகளை அவிழ்த்த மூன்று பேரும் வெளியே வந்து சத்தம் போட்டதை அடுத்து, ஆர்.எஸ்.,புரம் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் விசாரிக்கின்றனர்.

