/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
600 சதுரடி கொடி பேனரில் கைகளால் மூவர்ணம் பதிவு
/
600 சதுரடி கொடி பேனரில் கைகளால் மூவர்ணம் பதிவு
ADDED : ஜன 26, 2024 11:39 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், உலக சாதனை நிகழ்வாக, 600 சதுர அடி கொடி பேனரில், கைகளால் வண்ணம் தீட்டப்பட்டது.
'ரோட்டரி கிளப் ஆப்' பொள்ளாச்சி, 'நியூ ப்ரீடஜ் சென்டர் பார் ஸ்பெஷல் நீட்ஸ்' அமைப்பு சார்பில், இணையும் கைகள் என்ற உலக சாதனை நிகழ்ச்சி, பொள்ளாச்சி ரோட்டரி ஹாலில் நடந்தது.
அதில், பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்கள், நண்பர்கள் குழுவாக இணைந்து, 600 சதுர அடி அளவிலான கொடி பேனரில், கைகளால் வண்ணம் தீட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
உலக சாதனை குழுவின் மெய்நிகர் புத்தகங்கள் அமைப்பை சேர்ந்த சுரேஷ், சுந்தர் ஆகியோர் குழுவுக்கு ஆதரவாக செயல்பட்டனர். இதற்கான பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. தனியார் நிறுவன உரிமையாளர்கள், ரோட்டரி கிளப் ஆப் பொள்ளாச்சி அமைப்பினர் பங்கேற்றனர்.

