sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

9 ஊராட்சிகளுக்கு 90 லட்சம் லிட்டர் குடிநீர்! மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., கோரிக்கை

/

9 ஊராட்சிகளுக்கு 90 லட்சம் லிட்டர் குடிநீர்! மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., கோரிக்கை

9 ஊராட்சிகளுக்கு 90 லட்சம் லிட்டர் குடிநீர்! மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., கோரிக்கை

9 ஊராட்சிகளுக்கு 90 லட்சம் லிட்டர் குடிநீர்! மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., கோரிக்கை


ADDED : பிப் 29, 2024 11:31 PM

Google News

ADDED : பிப் 29, 2024 11:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்:''பவானி ஆற்றில் நீர்வரத்து முற்றிலும் குறைந்ததால், திருப்பூர் இரண்டாவது குடிநீர் திட்டத்திலிருந்து, காரமடை கிழக்கு பகுதியில் உள்ள ஒன்பது ஊராட்சிகளுக்கு, தினமும் 90 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும்,'' என, எம்.எல்.ஏ., செல்வராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து, 19 குடிநீர் திட்டங்களுக்கு நீர் எடுக்கப்படுகிறது. காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிழக்கு பகுதியில் உள்ள சின்னகள்ளிப்பட்டி, முடுதுறை, இரும்பறை, இலுப்பநத்தம், பெள்ளேபாளையம், ஜடையம்பாளையம், சிக்கதாசம்பாளையம், சிக்காரம்பாளையம், பெள்ளாதி ஆகிய ஒன்பது ஊராட்சிகளுக்கு, சிறுமுகை அருகே மூலையூரில் பவானி ஆற்றில் இருந்து நீர் எடுக்கப்படுகிறது. பவானி ஆற்றில் நீரோட்டம் குறைந்ததால், இந்த ஊராட்சிகளுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ், மாவட்ட கவுன்சிலர் கந்தசாமி, காரமடை ஊராட்சி ஒன்றிய சேர்மன் மணிமேகலை மகேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் ஆலாங்கொம்பு அருகே பவானி ஆற்றை ஆய்வு செய்தனர்.

எம்.எல்.ஏ., செல்வராஜ், நிருபர்களிடம் கூறியதாவது:

பவானி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால், ஆற்றில் ஆங்காங்கே உள்ள குழிகளில், தண்ணீர் தேங்கியுள்ளது. நீரோட்டம் இல்லாமல் உள்ளதால், குடிநீர் திட்டங்களுக்கு போதிய தண்ணீர் பம்பிங் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நகர்களின் கழிவு நீர், கிராமங்களில் இருந்து பள்ளங்களில் வரும் கழிவு நீர், ஆலைகளின் கழிவு நீர் ஆகியவற்றால் குடிநீர் மாசடைந்துள்ளது. இந்த குடிநீரை இரண்டு நாட்களுக்கு மேல் வைத்தால், துர்நாற்றம் வீசுகிறது.

இதுகுறித்து, கடந்தாண்டு, மாவட்ட கலெக்டரிடம் புகார் கூறியதன் பேரில், நேரில் ஆய்வு செய்து, மூலையூரில் பவானி ஆற்றில் உள்ள தண்ணீர் உறிஞ்சும் கிணற்றை வேறு பகுதிக்கு மாற்றுவதாக கூறினார். இதுகுறித்து சட்டசபையில் மானிய கோரிக்கையின் போது பேசினேன். அதற்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர், எம்.எல்.ஏ., கூறிய தகவல் உண்மையாக இருக்குமேயானால், நானே நேரடியாக ஆய்வு செய்து, கிணற்றை வேறு இடத்திற்கு மாற்றுவதாக கூறினார்.

ஆனால் ஓராண்டாகியும், இந்த அரசும், மாவட்ட அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. திருப்பூர் இரண்டாவது குடிநீர் திட்டத்திற்கு, 2 கோடியே, 70 லட்சம் லிட்டர் தண்ணீர் பவானி ஆற்றில் இருந்து எடுக்கப்படுகிறது. திருப்பூர் மூன்றாவது குடிநீர் திட்டத்திற்கு, பவானி ஆற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரால், இரண்டாவது குடிநீர் திட்டத்தில் எடுக்கப்படும் தண்ணீர் மீதமாகிறது.

எனவே, இத்திட்டத்தில் இருந்து, காரமடை கிழக்குப் பகுதியில் உள்ள ஒன்பது ஊராட்சிகளுக்கு தினமும், 90 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் பவானி ஆற்றை, அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து, நிலவி வரும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். தவறும் பட்சத்தில் பொதுமக்கள், சாலை மறியல் செய்ய உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us