/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆற்றின் நீர்சுழலில் சிக்கிய சிறுவன் பலி
/
ஆற்றின் நீர்சுழலில் சிக்கிய சிறுவன் பலி
ADDED : ஜன 26, 2024 01:03 AM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, ஆற்றில் நண்பர்களுடன் குளித்த சிறுவன், நீரில் மூழ்கி இறந்தது குறித்து ஆனைமலை போலீசார் விசாரிக்கின்றனர்.
பொள்ளாச்சி, முத்துக்கவுண்டர் லே -- அவுட்டை சேர்ந்தவர் அஸ்வஜீத்,14. இவர், மாக்கினாம்பட்டி அரசுப்பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார். இவர், நேற்று நண்பர்களுடன் அம்பராம்பாளையம் ஆற்றில் குளித்துள்ளார். அப்போது, நீர்சுழலில் சிக்கி உயிருக்கு போராடினர்.
இதுகுறித்து, தகவல் அறிந்த ஆனைமலை போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். தீயணைப்புத்துறையினர், ஆற்றில் தேடி அந்த சிறுவனின் உடலை மீட்டு, ஆனைமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஆனைமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

