/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒளிராத மையத்தடுப்பு விளக்குகள் கண்டறிந்து சீரமைக்க கோரிக்கை
/
ஒளிராத மையத்தடுப்பு விளக்குகள் கண்டறிந்து சீரமைக்க கோரிக்கை
ஒளிராத மையத்தடுப்பு விளக்குகள் கண்டறிந்து சீரமைக்க கோரிக்கை
ஒளிராத மையத்தடுப்பு விளக்குகள் கண்டறிந்து சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜன 26, 2024 11:21 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், பாலக்காடு ரோட்டின் மையத்தடுப்பு விளக்குகள் எரியாததால், இருள் சூழ்ந்து விபத்துகள் அதிகரித்து வருகின்றன.
பொள்ளாச்சி நகரில், நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. நகர் மற்றும் புறநகர் வழித்தடங்கள், எந்நேரமும் வாகன போக்குவரத்து நிறைந்து பரபரப்பாக காணப்படுகிறது.
போக்குவரத்து நெரிசலால் அவ்வப்போது ஏற்படும் வாகன விபத்துகளை தடுக்க, திருப்பூர், கோவை, பாலக்காடு வழித்தடங்களில், மையத்தடுப்புகளில் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், பாலக்காடு ரோட்டின் மையத்தடுப்புகளில் மின்விளக்குகள் சரிவர எரியாததால், விபத்துகள் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது:
பாலக்காடு ரோட்டில், மையத்தடுப்புகளில் அமைக்கப்பட்டுள்ள விளக்குகள் பல மாதங்களாக எரிவதில்லை. இதனால், வழித்தடத்தில், இரவு நேரத்தில் இருள் சூழ்ந்தே காணப்படுகிறது.
போக்குவரத்து நிறைந்த பல வழித்தடங்களில், இத்தகைய நிலை உள்ளதால், விபத்து அபாயம் ஏற்படுகிறது. பழுதான விளக்குகளை சரி செய்வதுடன், இரவு நேரங்களில் விளக்குகள் எரிவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

