/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாடகைக்கு வீடு பார்க்க வந்தது போல் மயக்க 'ஸ்ப்ரே' அடித்து நகை பறிக்க முயற்சி சிக்கினார் கில்லாடி பெண்

ADDED : மார் 24, 2025 05:58 AM
கோவை : வீட்டில் தனியாக இருந்த பெண்களை குறி வைத்து, முகத்தில் மயக்க 'ஸ்ப்ரே' அடித்து, செயின் பறிக்க முயன்ற பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.
கோவை, கே.கே.புதுார், நஞ்சம்மாள் வீதியை சேர்ந்தவர் ராஜன், 62; தாயார் தனலட்சுமி மற்றும் மாற்றுத்திறனாளி சகோதரி பிரபா ஆகியோருடன் வசித்து வருகிறார்.
வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விடுவதாக, வீட்டின் முன் 'போர்டு' வைத்துள்ளார். போர்டை பார்த்து கடந்த ஜனவரி மாதம் பெண் ஒருவர், வீடு கேட்டு வந்தார்.
வீட்டை பார்த்து பிடித்திருப்பதாக கூறி அட்வான்ஸாக, ரூ.50 ஆயிரம் கொடுத்து சென்றார்.
சில நாட்களுக்கு பின் , வேறு வீடு பார்த்து விட்டதாக கூறி, பணத்தை திரும்ப பெறுவதற்காக, தனலட்சுமி வீட்டிற்கு வந்தார்.
அப்போது பிரபா பணத்தை, 'ஜி பே' மூலம் அனுப்பி வைத்தார். இருவருடனும் சகஜமாக பேசிக்கொண்டிருந்த அந்த பெண், திடீரென தான் மறைத்து வைத்திருந்த 'ஸ்ப்ரே'வை எடுத்து தனலட்சுமி மற்றும் பிரபா ஆகியோர் முகத்தில் அடித்துள்ளார். அவர்களின் செயினை பறித்தார்.
வீட்டிற்குள் யாரோ வருவது போல் சத்தம் கேட்டதால், நகைகளை அங்கேயே போட்டுவிட்டு தப்பி சென்று விட்டார். ராஜன் சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து 'ஜிபே' எண்ணை வைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது செயின் பறிக்க முயன்றது காட்டூர், ராம்நகர் பகுதியை சேர்ந்த மீனாட்சி, 49 என்பது தெரியவந்தது. போலீசார் மீனாட்சியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.