/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மண்ணில் நுண்ணுயிர் பெருக்க அறிவுரை
/
மண்ணில் நுண்ணுயிர் பெருக்க அறிவுரை
ADDED : பிப் 06, 2024 01:43 AM
கிணத்துக்கடவு;கோடை காலம் துவங்குவதை முன்னிட்டு, மண்ணில் நுண்ணுயிர் பெருக்க வேளாண் துறை சார்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு வட்டாரத்தில், பெருமளவு விவசாயம் சார்ந்த பகுதிகளாகவே உள்ளது. தற்போது கோடை காலம் துவங்குவதை முன்னிட்டு, மண்ணில் நுண்ணுயிர் பெருக்க கிணத்துக்கடவு வேளாண் துறை சார்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
கோடை உழவுக்கு பின், மண்ணில் உள்ள நுண்ணுயிர்களை பெருக்க தொழு உரத்துடன் அசோஸ்பைரில்லம் என்ற பாக்டீரியாவும், பாஸ்போ பாக்டீரியா என்ற நுண்ணுயிரியும் கலந்து வைக்க வேண்டும். இந்த கலவையை, 15 முதல் 20 நாட்கள் வரை வைத்திருக்கலாம்.
விதைப்புக்கு பின், இதனை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்தால் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் பெருக்கம் அடையும், என, கிணத்துக்கடவு வேளாண் உதவி இயக்குனர் அனந்தகுமார் மற்றும் வேளாண் துணை அலுவலர் மோகனசுந்தரம் தெரிவித்தனர்.