/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிக்கு உதவி
/
முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிக்கு உதவி
ADDED : பிப் 01, 2024 11:32 PM
வால்பாறை:அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, 1.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை முன்னாள் மாணவர்கள் வழங்கினர்.
வால்பாறை அடுத்துள்ள சோலையாறு அணை அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயின்ற, முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டம் நடந்தது. பள்ளி வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என மாணவர்கள் உறுதியளித்தனர்.
அதன்பின், வாட்டர் டாக்டர், நோட்டு, புத்தகம், பேனா, மாலை நேர சிற்றுண்டிக்கு தேவையான பாத்திரங்கள், பள்ளி பயன்பாட்டிற்காக 'லேப்டாப்' மற்றும் 'பிரிண்டர்' உள்ளிட்ட, 1.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பள்ளி தலைமை ஆசிரியர் லோகாம்மாள் மற்றும் ஆசிரியர்களிடம் முன்னாள் மாணவர்கள் வழங்கினர்.
தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக முன்னாள் மாணவர்கள் தெரிவித்தனர். மாணவர்களின் இந்த செயலை பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

