/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தமிழகத்தில் அமித் ஷா எதுவும் செய்ய முடியாது': தி.மு.க., அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு

ADDED : ஜூன் 10, 2025 10:23 PM
கோவை; ''தமிழகத்துக்கு அடிக்கடி வரும் அமித் ஷா, எதுவும் செய்ய முடியாது,'' என, தி.மு.க., அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசினார்.
கோவை வடக்கு மாவட்ட தி.மு.க., ஆர்.எஸ்.புரம் பகுதி கழகம் சார்பில், நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. மாவட்ட செயலாளர் ரவி தலைமை வகித்தார். பகுதி கழக செயலாளர் கார்த்திக் செல்வராஜ் வரவேற்றார்.
அதில், கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:
எதிர்க்கட்சி தலைவர் பழனிச்சாமி பொய் மட்டுமே பேசி வருகிறார்; எதையெடுத்தாலும் பொய் பேசி, அரசியல் செய்ய முயல்கிறார். இந்தியாவிலேயே, மோடியை எதிர்த்து சிறப்பாக ஆட்சி நடப்பது தமிழகத்தில் மட்டுமே. அனைவருக்கும் வழிகாட்டியாக முதல்வர் ஸ்டாலின் விளங்குகிறார்.
தமிழகத்துக்கு அமித் ஷா ஏன் அடிக்கடி வருகிறார். அவரது வருகையை பார்த்து நாங்கள் பயப்படுவதாக சொல்கின்றனர். லோக்சபா தேர்தலின்போது, பிரதமர் மோடி தமிழகத்துக்கு எட்டு முறை வந்தார். அத்தனை முறை வந்தும், அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அமித் ஷா வந்து என்ன செய்யப் போகிறார்? அவராலும் ஒன்றும் செய்ய முடியாது. லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதைபோல், சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும். அதற்கு மக்கள் பணிகளில் கட்சியினர் தீவிரம் காட்ட வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.