/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இருவர் மீது பாய்ந்த குண்டர் தடுப்பு சட்டம்
/
இருவர் மீது பாய்ந்த குண்டர் தடுப்பு சட்டம்
ADDED : அக் 14, 2025 09:49 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த கவியரசன்,21, என்பவரை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க எஸ்.பி. கார்த்திக்கேயன், கோவை மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் பவன்குமார், குண்டர் தடுப்பு சட்டத்தில் கவியரசனை கைது செய்ய உத்தரவிட்டார். சிறையில் உள்ள கவியரசனுக்கு அதற்கான நகல் வழங்கப்பட்டது.
* பொள்ளாச்சியில் கடந்த ஆக. மாதம் ரயில்வே ஸ்டேஷன் அருகே ஐந்து கிலோ கஞ்சா வைத்திருந்த மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த மதியார் ரஹ்மான் மொல்லா,26, என்பவரை மேற்கு போலீசார் கைது செய்தனர்.
அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க எஸ்.பி. பரிந்துரையின் பேரில், கோவை கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

