/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதுபோதையில் தகராறு; பீர் பாட்டிலால் தாக்குதல்
/
மதுபோதையில் தகராறு; பீர் பாட்டிலால் தாக்குதல்
ADDED : ஜூன் 17, 2025 11:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; சிங்காநல்லுார், கே.பி.ஆர்., லே அவுட்டை சேர்ந்தவர் அஜித், 30. இவர் நண்பர்கள் அருண்குமார், மனோஜ், கார்த்திகேயன், இளங்கோவனுடன் பாரில் மது குடித்துக்கொண்டிருந்த போது, இளங்கோ, மனோஜை தகாத வார்த்தைகளால் திட்டினார்.
இதை கண்டித்து, அவரை அஜித் சமாதானப்படுத்த முயன்றபோது, ஆத்திரமடைந்த இளங்கோ அஜித்தை திட்டினார். இளங்கோவின் நண்பர் ஆகாஷை அழைத்தார். இருவரும் பீர் பாட்டிலால் அஜித் தலையில் தாக்கி தப்பினர்.அஜித் அளித்த புகாரின்படி,சிங்காநல்லுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இளங்கோவன், 24,கார்த்திகேயனை, 26 கைது செய்து, சிறையில் அடைத்தனர்.