/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிக்கன் பணத்தை திருப்பி கேட்டவர் மீது தாக்குதல்
/
சிக்கன் பணத்தை திருப்பி கேட்டவர் மீது தாக்குதல்
ADDED : அக் 14, 2025 09:54 PM
கோவை; தெற்கு உக்கடத்தை சேர்ந்தவர் சுபன், 27. அப்பகுதியில் கோழி இறைச்சிக்கடை நடத்தி வருகிறார். இவர் கோவை ரயில்வே ஸ்டேஷன் அருகே செயல்பட்டு வரும் ராதிகா என்பவரின் ஓட்டலுக்கு கோழி இறைச்சி வழங்கி வந்தார்.
சுபனுக்கு, ரூ.1.19 லட்சம் தரவேண்டி இருந்தது. கடந்த, 11ம் தேதி பணத்தை பெற்றுக் கொள்ள வருமாறு ராதிகா, சுபனிடம் தெரிவித்தார். அங்கு சென்ற சுபனிடம் ரூ.40 ஆயிரத்தை, 12ம் தேதிக்குள் தருவதாகவும், மீதித்தொகையை விரைவில் தருவதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கடையில் பணிபுரியும், திருப்பூர், சரஸ்வதி நகரை சேர்ந்த ராஜன் கார்க்கி, 25, தர்மபுரி பாப்பிரெட்டிபட்டியை சேர்ந்த வினோ விஜய், 21, ஈரோடு நால் ரோட்டை சேர்ந்த மதன், 28 ஆகிய மூவரும் சுபனை தாக்கினர்.
அவருக்கு காயம் ஏற்பட்டது. சுபன் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார், மூவரையும் கைது செய்து பிணையில் விடுவித்தனர்.

