/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு
/
வேளாண் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு
ADDED : பிப் 23, 2024 11:16 PM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, கூளநாயக்கன்பட்டியில் வேளாண் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு கலை பிரசாரம் நடந்தது.
பொள்ளாச்சி தெற்கு வேளாண் துறை, வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கான திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு கலை பிரசாரம் கூளநாயக்கன்பட்டியில் நடந்தது. ஊராட்சி துணை தலைவர் ராமராஜ் முன்னிலை வகித்தார்.
விடியல் கலை குழுவினர், தற்போது வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்களை, பாடல்கள், நாடகங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு விளக்கினர்.
வேளாண் துறையின் துணை வேளாண் அலுவலர் ரவி தினகர், நடப்பாண்டில் செயல்படுத்தப்படும் மானியத்திட்டங்கள், 2024 - 25ம் ஆண்டு கூளநாயக்கன்பட்டி ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து விளக்கினார்.
இத்திட்டத்தில் விவசாயிகள் அனைத்து துறைகளையும் அணுகி, ஊராட்சிக்கு தேவையான அனைத்து வசதிகளை பெற, முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
உதவி வேளாண் அலுவலர் கந்தசாமி நன்றி கூறினார். விழிப்புணர்வு கலை பிரசார முன்னேற்றபாடுகளை 'அட்மா' தொழில்நுட்ப அலுவலர்கள் நாகநந்தினி, ராதா, உதவி வேளாண் அலுவலர் ஆகியோர் செய்திருந்தனர்.