/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீயணைப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரம்
/
தீயணைப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரம்
ADDED : அக் 14, 2025 09:24 PM

அன்னுார்; தீயணைப்புத் துறை சார்பில், இரண்டு நாட்கள், பொது மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் நடத்த அறிவுறுத்தப்பட்டது. 'வாங்க கற்றுக் கொள்வோம்,' 'தீ பாதுகாப்பு அறிவோம்' 'உயிர்களை காப்போம்' என்னும் தலைப்பில் பிரசாரம் நடந்தது.
அன்னுார் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பான்களை இயக்கும் விதம் குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
தீயணைப்பு அலுவலர் பாலச்சந்திரன் பேசுகையில், தீயணைப்பான்களை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பராமரிக்க வேண்டும் ஆண்டுக்கு ஒரு முறை நிரப்ப வேண்டும். சிலிண்டர்களை கிடைமட்டமாக வைக்கக் கூடாது. அருகருகே இரண்டு சிலிண்டர்களை வைக்கக்கூடாது.
சிறிய அளவில் தீ ஏற்பட்டால் தீயணைப்பான்களை பயன்படுத்த வேண்டும். பெரிய அளவிலான தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், என்றார். தீ விபத்தில் தப்பித்தல் குறித்த பொதுமக்களின் கேள்விகளுக்கு தீயணைப்பு வீரர்கள் பதிலளித்தனர்.

