/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பஜனை ஒன்றுதான் பகவானை தொடர்பு கொள்ளும் எளிய வழி'
/
'பஜனை ஒன்றுதான் பகவானை தொடர்பு கொள்ளும் எளிய வழி'
ADDED : ஜூன் 25, 2025 11:30 PM

கோவை; கோவை ராம்நகரில் உள்ள கோதண்டராமர் கோவிலில், கோவை ஸ்ரீசத்யசாயி சேவா நிறுவனம் சார்பில், நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் சத்யசாயி பக்தர்கள் பங்கேற்று, விஷ்ணு ஸஹஸ்ர நாமம் பாராயணம் மற்றும் நாம சங்கீர்த்தனம் பாடி வழிபாடு செய்தனர்.
கோவை ஸ்ரீசத்யசாயி சேவா நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது: பஜனை ஒன்றுதான் பகவானோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் எளிய வழியாகும். இதைதான் சுவாமி எங்களுக்கு போதித்து இருக்கிறார். பெரிய அளவில் யாகம் நடத்தினால்தான், பகவானின் அனுக்கிரகம் கிடைக்கும் என்பதில்லை.
பகவானை மனதில் நினைத்து தினமும், 30 நிமிடங்கள் அவரது நாமத்தை சொல்லி பஜனை செய்தால் போதும்; அவரது அருள் கிடைத்து விடும். மனதில் அமைதியும், நிம்மதியும் கிடைக்கும். எல்லா நன்மைகளும் வாழ்க்கையில் ஏற்படும். மாதத்தின் கடைசி புதன்கிழமை, இங்கு நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சி நடக்கிறது. பக்தர்கள் பங்கேற்கலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.