/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இளநிலை, முதுநிலை விண்ணப்பிக்க பாரதியார் பல்கலை தேதி நீட்டிப்பு
/
இளநிலை, முதுநிலை விண்ணப்பிக்க பாரதியார் பல்கலை தேதி நீட்டிப்பு
இளநிலை, முதுநிலை விண்ணப்பிக்க பாரதியார் பல்கலை தேதி நீட்டிப்பு
இளநிலை, முதுநிலை விண்ணப்பிக்க பாரதியார் பல்கலை தேதி நீட்டிப்பு
ADDED : ஜூன் 11, 2025 06:45 AM
கோவை; மாணவர்களின் நலன் கருதி பல்வேறு படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதியை, பாரதியார் பல்கலை நீட்டித்துள்ளது.
கோவை பாரதியார் பல்கலை இளநிலை மற்றும் முதுநிலை பாடங்களுக்கான சேர்க்கை குறித்த அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது. மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
இந்நிலையில், குறிப்பிட்ட இளநிலை மற்றும் முதுநிலை பாடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலத்தை, பாரதியார் பல்கலை நீட்டித்துள்ளது.
அதன்படி, எம்.எஸ்சி., சுற்றுச்சூழல் அறிவியல் பாடத்துக்கு வரும், 15ம் தேதி, முதுநிலை நுாலக அறிவியல், எம்.காம்.,(நிதி தொழில்நுட்பம்), எம்.எஸ்.டபிள்யு., ஆகிய படிப்புகளுக்கு வரும், 20, பி.எஸ்சி.,(கலப்பு) இயற்பியல், வேதியியல் ஆகிய படிப்புகளுக்கு வரும், 23, எம்.எஸ்சி., (மின்னணுவியல் மற்றும் கருவியியல்), எம்.ஏ.,(தொழில் வழிகாட்டுதல்), ஆகிய படிப்புகளுக்கு, 25, எம்.ஏ., மொழியியல், சோசியாலஜி, எம்.எஸ்சி., நானோசயின்ஸ், தொழில்நுட்பம், டெக்ஸ்டைல், அப்பேரல் டிசைன், இ-லேர்னிங் தொழில்நுட்பம், பயோஇன்பர்மேட்டிக்ஸ், ஆகிய பாடங்களுக்கு, 30, பி.ஜி., டிப்ளமோ கெமி இன்பர்மேட்டிக்ஸ் படிப்புக்கு ஜூலை 15, எம்.எட்., படிப்புக்கு, பி.ஜி.டிப்ளமோ கைடென்ஸ், கவுன்சிலிங் இன் எஜூகேஷன் படிப்புக்கு ஜூலை 30, எம்.ஏ., ஜென்டர் ஸ்டடீஸ் படிப்புக்கு, ஜூலை, 31ம் தேதி வரை, காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.