/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெங்கட்ரமண பெருமாள் கோவிலில் பெரிய கும்பிடு விழா
/
வெங்கட்ரமண பெருமாள் கோவிலில் பெரிய கும்பிடு விழா
ADDED : ஜூன் 27, 2025 10:02 PM

ஆனைமலை; ஆனைமலை அருகே, ரமணமுதலிபுதுார் ரங்கநாத பூமிநீளா சமேத வெங்கட்ரமண பெருமாள் கோவில், வீராமத்தி அம்மன் கோவலில், பெரிய கும்பிடு விழாநேற்று துவங்கியது.
விழாவையொட்டி, நேற்று காலை, பொங்கல் வைத்தல், தீர்த்தம் கொண்டு வருதல், கும்பஸ்தாபனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இன்று,திருப்பல்லாண்டு, திருப்பள்ளி எழுச்சி, விஸ்வரூப தரிசனம், தலைகட்டு பொங்கல், பொது பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
தொடர்ந்து, பூதகவாளம், பந்த சேர்வை, அலங்கார தளிகை, உற்சவ மூர்த்திகளுக்கு திருமஞ்சனம், திருஊஞ்சல் உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது.வரும், 29ல் வெங்கட்ரமண பெருமாளுக்கு அன்னாபிேஷகம், திருவீதி உலா, மறுகவாளம், வீரமாத்தி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், மகா சபை கூடுதல், விடையாற்றி உற்சவம், சக்தி கும்பம் கங்கையில் விடுதல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கிறது.