/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சலுகை கட்டணத்தில் இருதய பரிசோதனைகள்
/
சலுகை கட்டணத்தில் இருதய பரிசோதனைகள்
ADDED : செப் 29, 2025 12:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இ ருதய நோய் சிகிச்சையில் சிறப்பாக செயல்பட்டு வரும், கோவை ஹார்ட் பவுண்டேஷன் தற்போது, கோவை எல் அண்ட் டி பைபாஸ் சாலை, இருகூரில் 150 படுக்கை வசதியுடன் புக்கரா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.
இங்கு, உலக இருதய தின நாளை முன்னிட்டு, முதல் அக்.,28ம் தேதி வரை, அதிநவீன எம்.ஆர்.ஐ., ஸ்கேன், 50 சதவீத தள்ளுபடியிலும், கால்சியம் ஸ்கோர் சி.டி., பரிசோதனை சிறப்பு சலுகை திட்டத்தின் மூலமும் செய்யப்படுகிறது.
25 சதவீத சிறப்பு சலுகையில், ஆஞ்சியோகிராமும் செய்து கொள்ளலாம் என, மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். பரிசோதனை முன்பதிவுக்கு, 94875 44415, 97865 44415.

