sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

எல்.கே.ஜி., யு.கே.ஜி., மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்குகிறது மாநகராட்சி

/

எல்.கே.ஜி., யு.கே.ஜி., மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்குகிறது மாநகராட்சி

எல்.கே.ஜி., யு.கே.ஜி., மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்குகிறது மாநகராட்சி

எல்.கே.ஜி., யு.கே.ஜி., மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்குகிறது மாநகராட்சி


ADDED : ஜூன் 28, 2025 11:57 PM

Google News

ADDED : ஜூன் 28, 2025 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை மாநகராட்சி பள்ளிகளில் எல்.கே.ஜி., - யு.கே.ஜி., பிரிவுகளில் சேர்ந்துள்ள மாணவ, மாணவியருக்கு இலவசமாக பாடப்புத்தகங்கள் வழங்க, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி சார்பில், 19 பள்ளிகளில், எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. நடப்பு கல்வியாண்டில் (2025-26), 51 துவக்கப்பள்ளிகள், 8 நடுநிலைப்பள்ளிகளில் இவ்வகுப்புகள் துவக்கப்பட்டன. மொத்தம், 51 துவக்கப்பள்ளிகள், 27 நடுநிலைப்பள்ளிகளில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளுக்கு, மாணவர் சேர்கை நடத்தப்பட்டது.

ஏற்கனவே செயல்பட்டு வரும் பள்ளிகளில், எல்.கே.ஜி., - 368, யு.கே.ஜி., - 580 மாணவ, மாணவியர் சேர்ந்தனர். புதிதாக துவக்கப்பட்ட பள்ளிகளில் எல்.கே.ஜி., - 765, யு.கே.ஜி., - 773 மாணவர்கள் சேர்க்கை நடந்தது. மாநகராட்சி பள்ளிகளில் மொத்தம், எல்.கே.ஜி., - 1,133, யு.கே.ஜி., - 1,353 என, 2,486 மாணவ - மாணவியர் சேர்ந்துள்ளனர்.

இம்மாணவர்களுக்கு மாநகராட்சி சார்பில், இலவசமாக பாடப்புத்தகங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான தொகையை, மாநகராட்சி கல்வி நிதியில் இருந்து ஒதுக்க, மாமன்றத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us